Home நாடு “பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான சகிக்க முடியாத தாக்குதல்” – பக்காத்தான் தலைவர்கள்

“பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான சகிக்க முடியாத தாக்குதல்” – பக்காத்தான் தலைவர்கள்

563
0
SHARE
Ad

Lim Guan Engபுக்கிட் மெர்தாஜாம், டிச 21 – ‘த ஹீட்’ வார இதழ் நிறுத்தப்பட்டதற்கு எதிராக பக்காத்தான் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் (படம்) நேற்று வெளியிட்ட அறிக்கையில், “த ஹீட் வார இதழ் உள்துறை அமைச்சால் முடக்கப்பட்டது ஏன் என்று அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும்.”

“அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நாட்டின் நிலைமை மேலும் மோசமாகிக் கொண்டிருப்பதை உணர்த்துகிறது. உங்களால் வெப்பத்தை (த ஹீட்) தாங்கமுடியவில்லை என்றால் சமையலறையை விட்டு விலகி நில்லுங்கள்.”

#TamilSchoolmychoice

“பொதுத்தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக மீறப்பட்டு வருகின்றன. முதலில் விலையேற்றம், இப்போது பத்திரிகை சுதந்திரம் பறிப்பு.பொதுத்தேர்தலின் போது பத்திரிகை சுதந்திரம் அளிக்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதி இப்போது எங்கே போனது?” என்று தனது அறிக்கையில் குவான் எங் தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கை சுதந்திரத்தின் மீது தாக்குதல் n-surendran_fmt-interview-300x199

இவ்விவகாரம் குறித்து நேற்று கருத்துரைத்த பிகேஆர் உதவித் தலைவர் மற்றும் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சுரேந்திரன் (படம்), “இது ஜனநாயகமற்ற, சுயநலமிக்க மற்றும் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான சகிக்க முடியாத தாக்குதல்” என்று விமர்சித்துள்ளார்.

கூட்டரசு அரசியலமைப்பின் படி, ஹீட் இதழ் நிறுத்தம், பத்திரிகை சுதந்திரத்தை காக்கும் ‘சட்ட விதி 10’ ஐ மீறிய செயல் என்றும் சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில், அச்சகங்கள் மற்றும் வெளியீடுகள் சட்டம் 1984 ஐ நீக்க வேண்டும் என்றும் சுரேந்திரன் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.