Home உலகம் இலங்கையில் கொத்து கொத்தாக எலும்பு கூடுகள் கண்டுபிடிப்பு!

இலங்கையில் கொத்து கொத்தாக எலும்பு கூடுகள் கண்டுபிடிப்பு!

601
0
SHARE
Ad

 srilangka

கொழும்பு, ஜன 20- இலங்கையின் வடகிழக்கு பகுதியில் பல அடுக்கு கொண்ட புதைக் குழியில் கொத்து கொத்தாக எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் தடயவியல் நிபுணர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் உச்ச கட்ட போர் நடந்தது. அப்போது ஏராளமான அப்பாவி தமிழர்களை ராணுவத்தினர் கொன்று குவித்ததாக சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக அதிபர் ராஜபக்சே மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று பல நாட்டு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் வடகிழக்கு பகுதியில் தடயவியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வில், ஒரு இடத்தில் பல அடுக்கு கொண்ட புதைக் குழியை கண்டுபிடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

skeleton

இலங்கையில் போரின் போது ஏராளமான தமிழர்களை கொன்று ஒரே இடத்தில் புதைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஆய்வு நடத்த மருத்துவ அதிகாரி தனஞ்செயா வைத்தியரத்னே தலைமையில் தடயவியல் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மன்னார் பகுதியில் உள்ள திருகாத்தீஸ்வரம் என்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு இடத்தில் ஏராளமான எலும்பு கூடுகளை கண்டெடுத்தனர்.

பல அடுக்குகளாக அங்கு எலும்பு கூடுகள் இருந்ததை பார்த்து ஆய்வு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த புதைக் குழியில் 36 பேரை போட்டு புதைத்துள்ளனர். அவர்கள் எப்படி இறந்தனர். எப்போது இறந்தனர் என்பது அறிவியல் ஆய்வுக்கு பின்னர்தான் தெரியும் என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் வைத்தியரத்னே கூறியுள்ளார்.