Home Kajang by-Election காஜாங்கில் அன்வாரை வீழ்த்தத் தயாராகும் சியூ!

காஜாங்கில் அன்வாரை வீழ்த்தத் தயாராகும் சியூ!

595
0
SHARE
Ad

Chiewகோலாலம்பூர், பிப் 22 – காஜாங் இடைத்தேர்தலில் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை எதிர்த்து களமிறங்குவதற்கு முழுவதும் தான் தயாராக இருப்பதாக தேசிய முன்னணி வேட்பாளர் டத்தின் படுகா சியூ மெய் பன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “காஜாங் இடைத்தேர்தல் எனக்கு மிகவும் சவாலானது என்பதை அறிவேன். தங்களது கட்சியினரால் ‘உலகத் தலைவர்’ என்று பறைசாற்றப்படும் ஒரு தலைவரை எதிர்த்து களமிறங்குகின்றேன்” என்று தெரிவித்தார்.

“தங்களது கட்சியில் உள்ள உட்கட்சி பூசல்களை சரி செய்வதற்காகவும், அன்வார் மந்திரி பெசார் ஆவதற்காகவும் இந்த இடைத்தேர்தலை உருவாக்கியுள்ளனர். ஜனநாயகத்தின் மரியாதை நிலைநிறுத்துவதற்கும், மக்களின் உரிமையை காப்பாற்றுவதற்கும், காஜாங் இடைத்தேர்தலில் போட்டியிடும் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்” என்றும் சியூ கூறினார்.

#TamilSchoolmychoice

காஜாங் இடைத்தேர்தல் மூலமாக, மசீச சட்டமன்ற உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டு, சிலாங்கூர் மாநிலத்தில் தேசிய முன்னணி சார்பாக எதிர்கட்சித் தலைவராக அமர முடியும். அதன் மூலம் நாம் அவர்களின் தவறுகளுக்கு எதிராக குரல் கொடுக்க முடியும் என்றும் சியூ தெரிவித்தார்.

பிகேஆர் கட்சியின் காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ கடந்த ஜனவரி 27 ஆம் தேதி, திடீர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

வரும் மார்ச் 23 ஆம் தேதி காஜாங் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.