Home தொழில் நுட்பம் உலகம் முழுவதும் 195 மில்லியன் பொருட்கள் செல்பேசி மூலமாக இணையத்தில் இணைப்பு! அடுத்ததாக வாகனங்களிலும் இணைய...

உலகம் முழுவதும் 195 மில்லியன் பொருட்கள் செல்பேசி மூலமாக இணையத்தில் இணைப்பு! அடுத்ததாக வாகனங்களிலும் இணைய சேவை

707
0
SHARE
Ad

Internet 440 x 215பிப்ரவரி 22 – இன்றைக்கு உலகம் முழுவதும் பயனீட்டில் உள்ள செல்பேசிகளின் மூலமாக  பொருட்களையும் சேவைகளையும் இணையத்தில் இணைக்கும் போக்கு நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது.

#TamilSchoolmychoice

தற்போது சுமார் 195 மில்லியன் பொருட்களின் பயனீடுகள் செல்பேசிகளின் மூலமாக இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இணைப்புகள் தற்போது ஆண்டுக்கு 40 சதவீதம் விகிதத்தில் வளர்ச்சியை அடைந்து வருகின்றன. 2014ஆம் ஆண்டின் இறுதிக்குள் செல்பேசி மூலமாக 250 மில்லியன் இணைய இணைப்புகள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செல்பேசிகளில் உள்ள மொத்த இணைய இணைப்புகளில் 2 சதவீதம் பொருட்களையும் சேவைகளையும் இணைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. உலகின் முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அங்கம் வகிக்கும் ஜிஎஸ்எம்ஏ (GSMA) என்னும் அமைப்பின் கணிப்புப்படி எதிர்காலத்தில் பொருட்கள், பொறியியல் சாதனங்கள், பொதுமக்கள் என அனைவரும் செல்பேசிகளின் இணைப்புகளின் வழியாக ஒன்றிணைக்கப்படுவார்களாம்.

இதன்படி பார்க்கப்போனால் கணினிகள், திறன்பேசிகள், தட்டைக் கணினிகள், தொலைக்காட்சிகள், வாகனங்கள் என அனைத்தும் இணையத்தின் மூலமாக நேரடியாக இணைக்கப்படும்.

இந்த வளர்ச்சியின் அடுத்த கட்டமாக வாகனங்களிலும் இணைய சேவைகள் தொடங்கப்படவிருக்கின்றன.

வாகனங்களுக்கிடையில் ஒன்றுடன் ஒன்றை இணையம் மூலமாக இணைத்து எங்கெல்லாம் விபத்துகள் நிகழ்ந்துள்ளன, எங்கெல்லாம் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளன போன்ற தகவல்களை பரிமாறிக் கொள்ளும் வசதிகளை ஏற்படுத்தும் வழிமுறைகளை வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது ஆராய்ந்து வருகின்றன.

அடுத்த தலைமுறை பி.எம்.டபிள்யூ கார்களில் 4ஜி/எல்.டி.இ (LTE) தரத்திலான இணைய இணைப்பு சேவைகள் பொருத்தப்படும் என அந்த கார் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.