Home நாடு காஜாங் இடைத்தேர்தல்: வான் அஸிஸா 5,379 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி!

காஜாங் இடைத்தேர்தல்: வான் அஸிஸா 5,379 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி!

1219
0
SHARE
Ad

wan-azizah-chew-mei-funகாஜாங், மார்ச் 23 – இன்று நடைபெற்ற காஜாங் இடைத்தேர்தலில், பிகேஆர் மீண்டும் வெற்றி பெற்று தனது தொகுதியை தக்க வைத்துள்ளது.

பிகேஆர் வேட்பாளர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் சியூ மெய் பன் -ஐ விட 5,379 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

பிகேஆர் கட்சியின் காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ கடந்த ஜனவரி 27 ஆம் தேதி, திடீர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

வாக்குகள் விபரம் பின்வருமாறு:- 

பிகேஆர் வேட்பாளர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில்  – 16,741

தே.மு வேட்பாளர் டத்தின் படுகா சியூ மெய் பன் – 11,362

பெரும்பான்மை – 5,379