Home நாடு காஜாங் சட்டமன்றம்: வான் அஸிஸா இன்று அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்கிறார்!

காஜாங் சட்டமன்றம்: வான் அஸிஸா இன்று அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்கிறார்!

1082
0
SHARE
Ad

wan-azizah-chew-mei-funஷா ஆலம், ஏப்ரல் 7 – காஜாங் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இன்று அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்கிறார்.

சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா முன்னிலையில், “சட்டமன்ற உறுப்பினராக எனது பொறுப்புகளை முழு மனதோடு ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறி வான் அஸிஸா பதவிப் பிரமானம் எடுத்துக் கொண்டார்.

கடந்த மார்ச் 23 ஆம் தேதி நடைபெற்ற காஜாங் இடைத்தேர்தலில், தேசிய முன்னணி வேட்பாளர் டத்தின் படுகா சியூ மெய் பன்னை எதிர்த்து களமிறங்கிய வான் அஸிஸா 5,379 வாக்குகள் முன்னிலையில் வெற்றிபெற்றார்.

#TamilSchoolmychoice

காஜாங் தொகுதியில் கடந்த 13 வது பொதுத்தேர்தலில், பிகேஆர் பெற்ற வாக்குகளை ஒப்பிட்டால், இடைத்தேர்தலில் குறைந்த பெரும்பான்மை தான் கிடைத்துள்ளது.

எனினும், காஜாங்கில் வாக்குகளின் விகிதம் 13 வது பொதுத்தேர்தலில் இருந்த 57 சதவிகிதத்தில் இருந்து 59 சதவிகிதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.