Home Featured நாடு “அடுத்தது காஜாங்” – ‘பேரணித்’ தலைவர் ஜமால் அறிவிப்பு!

“அடுத்தது காஜாங்” – ‘பேரணித்’ தலைவர் ஜமால் அறிவிப்பு!

775
0
SHARE
Ad

Jamal Md Yunosகோலாலம்பூர் – ஒருநாள் சிறையில் இருந்துவிட்டு நேற்று வெளியே வந்த மலாய் அரசு சாரா இயக்கங்களின் தலைவர் ஜமால் முகமட் யூனுஸ் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்குத் தயாராகிவிட்டார்.

மலாய்காரர்களின் வலிமையைக் காட்ட சிவப்புச் சட்டைப் பேரணி என்ற ஒன்றை ஒருங்கிணைத்தவர், அதற்கு ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களிடமிருந்தே நல்ல வரவேற்பு கிடைத்ததை அறிந்தவுடன், கடந்த வாரம் பெட்டாலிங் ஸ்ட்ரீட் விவகாரத்தில் மூக்கை நுழைத்தார்.

தற்போது அதே பேரணி என்ற அஸ்திரத்தைப் பயன்படுத்தி காஜாங் நோக்கித் தனது படையை திருப்பத் திட்டமிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

காஜாங் சட்டமன்ற உறுப்பினரும், எதிர்கட்சித் தலைவருமான டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுக்கு எதிராக அடுத்த வாரம் காஜாங்கில் மாபெரும் பேரணி நடத்த இருப்பதாக ஜமால் அறிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி வான் அசிசா மீது ஜமால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“காஜாங்கிலுள்ள மலாய், சீன மற்றும் இந்திய மக்களை மூன்று முறை சந்தித்துப் பேசினேன். இதற்கு முன்பு வான் அசிசாவை அவர்கள் ஆதரித்தனர். ஆனால் தற்போது அவர்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். வான் அசிசா மீது ஏமாற்றத்தில் உள்ளார்கள்” என்று ஜமால் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேரணி குறித்து விரிவான செய்தியாளர் சந்திப்பு அக்டோபர் 11-ம் தேதி நடைபெறும் என்றும் ஜமால் அறிவித்துள்ளார்.