Home நாடு கார்த்திக் ‌ஷாமளனின் அடுத்த படைப்பு ‘சுகமாய் சுப்புலஷ்மி’

கார்த்திக் ‌ஷாமளனின் அடுத்த படைப்பு ‘சுகமாய் சுப்புலஷ்மி’

589
0
SHARE
Ad

1779960_619868168068276_1490795434_nகோலாலம்பூர், பிப் 22 – மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மலேசிய இளம் இயக்குநர் கார்த்திக் ‌ஷாமளனின் அடுத்த படைப்பின் பெயரும், படங்களும் அவரது அதிகாரப்பூர்வ பேஸ்புக் வலைத்தளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

‘சுகமாய் சுப்புலஷ்மி’ என்று அந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ‘மெல்லத் திறந்தது கதவு’ படத்திற்கு இசையமைத்த சமேஷன் மணிமாறன் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். யுவாஜி மற்றும் ஓவியா பாடல் வரிகள் எழுதுகிறார்கள்.

படத்தின் தலைப்பும், படங்களும் மிகவும் வித்தியாசமாகவும் அதே நேரத்தில் புதுமையாகவும் உள்ளது.

#TamilSchoolmychoice

இன்னும் நடிகர்களின் பெயர்கள் அறிவிக்காத நிலையில், இந்த படத்திலும் அவரது ஆஸ்தான நடிகர்களான குபேன் மகாதேவன், ஜெயா கணேசன், யோதேஸ்ரி ஷண்முகம் ஆகியோரது கூட்டணி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

– பீனிக்ஸ்தாசன்