Home கலை உலகம் ‘சுகமாய் சுப்புலக்‌ஷ்மி’ முன்னோட்டக் காணொளி வெளியீடு!

‘சுகமாய் சுப்புலக்‌ஷ்மி’ முன்னோட்டக் காணொளி வெளியீடு!

743
0
SHARE
Ad

SSL

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – கடந்த வருடம் வெளி்யிடப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மெல்லத் திறந்தது கதவு’ படத்தை இயக்கிய கார்த்திக் ‌ஷமலனின் அடுத்த படைப்பான ‘சுகமாய் சுப்புலக்‌ஷ்மி’ திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பு இன்று மதியம் கோலாலம்பூரில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் நாட்டிலுள்ள பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். அதில் செய்தியாளர்களுக்காக பிரத்தியேகமாக படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது.

#TamilSchoolmychoice

அதன் பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் படத்தின் இயக்குநர் கார்த்திக் ‌ஷமலன், தயாரிப்பாளர் யோகிசன் விஜயமோகன், ர.குமரன் மற்றும் இணை தயாரிப்பாளர் டத்தோ முருகன் அலிமுத்து, படத்தின் இசையமைப்பாளர்கள் ஷமேசன் மணிமாறன், நிரோஷன், பாடலாசிரியர் யுவாஜி, கதாநாயகன் சரேஷ், கதாநாயகிகள் புனிதா ஷண்முகம், பாக்யா அறிவுக்கரசு ஆகியோர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

SSL 2

ஹார்ட் வொர்க் பிலிம்ஸ் மற்றும் எம்ஏ புரொடக்‌சன்ஸ் இணைந்து தயாரிப்பில், காற்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், வித்தியாசமான கதையம்சம் கொண்டது என்றும், இதில் பணியாற்றிய அனைவரும் இளைஞர்கள் என்றும் இயக்குநர் கார்த்திக் ‌ஷமலன் தெரிவித்தார்.

மேலும், முற்றிலும் புதுமுகங்களை வைத்து உருவாக்கி இருக்கிறீர்களே? ஏன் பிரபல நடிகர்களை வைத்து இயக்கியிருக்கலாமே என்ற கேள்விக்குப் பதிலளித்த கார்த்திக், நாட்டில் இருக்கும் பல  முன்னணி நடிகர்களை வைத்து இயக்க நிறைய பேர் வருவார்கள். ஆனால் பல திறமைகளை கொண்டுள்ள புதுமுக நடிகர்கள் வாய்ப்பு இன்றி தவிப்பார்கள். அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில், தான் புதியவர்களை அறிமுகப்படுத்தியிருப்பதாக தெரிவித்தார்.

SSL 1

படத்தில் சுப்புலக்‌ஷ்மி என்ற கதாப்பாத்திரம் யார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கார்த்திக், அதை படம் பார்க்கும் போது தான் தெரிந்து கொள்ள முடியும். அதை இப்போது வெளியே சொல்ல முடியாது என்று கூறினார்.

சுமார் 600,000 ரிங்கிட் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் யோகிசன் கூறுகையில், ஒரே பள்ளியில் படித்தவரான கார்த்திக், முதலில் தன்னிடம் வந்து கதை சொல்லியதாகவும், அவ்வளவு பொருட்செலவில் படத்தை தயாரிக்க தான் தயங்கியதாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர் கார்த்திக் கொடுத்த ஊக்கத்தினால் தற்போது தான் ஒரு தயாரிப்பாளராக உருவெடுத்திருப்பதாகவும் யோகிசன் குறிப்பிட்டார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளிடையே உருவாகியிருக்கும் இத்திரைப்படம் அடுத்தாண்டு வெளியிடப்பட்டு ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘சுகமாய் சுப்புலக்‌ஷ்மி’ திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியை கீழே காணலாம்: