Home இந்தியா டெல்லியில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் தீ! 70 பயணிகள் உயிர் தப்பினர்!

டெல்லியில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் தீ! 70 பயணிகள் உயிர் தப்பினர்!

741
0
SHARE
Ad

jetairways-reutersபுதுடெல்லி, ஆகஸ்ட் 14– டெல்லியில் இருந்து மத்திய பிரதேச தலைநகர் போபாலுக்கு இன்று அதிகாலை 5.45 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. அதில் 70 பயணிகள் இருந்தனர்.

விமானம் ஓடு பாதையில் சென்று உயரே பறந்த போது அதன் வலது என்ஜினில் தீப்பிடித்ததாக பயணிகள் தெரிவித்தனர். விமானிக்கு அவர்கள் தீ எச்சரிக்கை தகவல் அளித்தனர்.

Jet-Airways,இதை கவனித்த விமானி உடனே விமானத்தை அவசரமாக மீண்டும் டெல்லியிலேயே தரை இறக்கினார். பயணிகள் அனைவரும் அவசரமாக கீழே இறக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தன. ஆனால், விமானத்தின் எந்தப் பகுதியிலும் தீப்பிடிக்கவில்லை என்பது தெரியவந்தது. என்றாலும் பயணிகள் வேறு விமானம் மூலம் போபால் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.