Home கலை உலகம் சின்மயி – சரேஷ் டி’7 குரலில் இதயத்தை வருடும் ‘ஆசை’ பாடல்!

சின்மயி – சரேஷ் டி’7 குரலில் இதயத்தை வருடும் ‘ஆசை’ பாடல்!

613
0
SHARE
Ad

chinmayiகோலாலம்பூர், மே 19 – மலேசிய இளம் இயக்குநர் கார்த்திக் ‌ஷாமளன் மற்றும் இசையமைப்பாளர் சமேஷன் மணிமாறன் கூட்டணியில் மீண்டும் ஒரு அடைமழையாக பொழியும் பாடல் “ஆசை”.

கார்த்திக் ‌ஷாமளன் இயக்கும் ‘சுகமாய் சுப்புலஷ்மி’ என்ற புதிய படத்தில் இடம் பெறவிருக்கும் இந்த பாடலின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த பாடலை பிரபல பாடகி சின்மயி பாடியுள்ளார். பாடலில் வரும் ஆண் குரலை மலேசியப் பாடகர்  சரேஷ் டி’7  பாடியுள்ளார்.

இந்த பாடலின் முன்னோட்டக் காட்சி அண்மையில் யூடியூப் மற்றும் மை தமிழ் சேனல் ஆகிய ஊடகங்களின் வாயிலாக வெளியிடப்பட்டது.

#TamilSchoolmychoice

“ஆசை கீர்த்தனை” எனத் தொடங்கும் அந்த மனதை வருடும் பாடலுக்கு பிரபல பாடலாசிரியர் யுவாஜி வரிகள் எழுதியுள்ளார்.Sharesh

கார்த்திக், சமேஷன், யுவாஜி கூட்டணியில் இதற்கு முன்பு வெளியான ‘மெல்லத் திறந்தது கதவு’ படப் பாடல் ‘அடைமழை’ மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

யுடியூபில் வெளியிடப்பட்ட இரண்டே வாரங்களில் கிட்டத்தட்ட 10,000 பார்வைகளை நெருங்கிவிட்ட ‘ஆசை’ படப் பாடலை கீழ்காணும் இணைப்பின் வழியாகக் காணலாம்.

http://www.youtube.com/watch?v=ppiwMGxukIE#t=319