Home கலை உலகம் மலையாளப் படங்களில் நடிக்க ஆசை – சமந்தா

மலையாளப் படங்களில் நடிக்க ஆசை – சமந்தா

708
0
SHARE
Ad

samanthaசென்னை, மே 19 – தமிழ், தெலுங்கு மொழி படத்தில் தொடர்ந்து நடித்து வரும் சமந்தா, தற்போது மலையாள படங்களில் நடிப்பதற்கு மிகவும் ஆசையாக இருப்பதாகவும் விரைவில் மலையாளப் படத்தில் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார். மலையாள படங்களின் கதைகளை கேட்டு வருவதாகவும் தெவித்தார்.

தமிழில் ‘பானா காத்தாடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. அப்படத்தை தொடர்ந்து ‘நான் ஈ’, ‘ நீதானே என் பொன்வசந்தம்’ போன்ற படங்கள் இவருக்கு சிறந்த நடிகை என அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் நடித்த படங்கள் சிறப்பாக ஓடியதால் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா.

#TamilSchoolmychoice

இரண்டு மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய்யுடன் ‘கத்தி’படத்திலும், சூர்யாவுடன் ‘அஞ்சான்’ படத்திலும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

இரண்டு மொழிகளிலும் நடித்தாலும் இதுவரை மலையாளத்தில் ஒரு படம் கூட நடிக்க வில்லையாம். மலையாளப் படங்களில் நடிக்க மிகவும் ஆசையாம். இதனால் தற்போது மலையாள கதைகளை கேட்டு வருவதாகவும் விரைவில் மலையாளத்துக்கு போவேன் என்றும் அறிவித்துள்ளார் சமந்தா.