Home கலை உலகம் கமலநாதன் துவக்கி வைத்த ‘வேள்வி 2’ தொடர் அறிமுக விழா!

கமலநாதன் துவக்கி வைத்த ‘வேள்வி 2’ தொடர் அறிமுக விழா!

516
0
SHARE
Ad

kalaiகோலாலம்பூர், மே 19 – எம்.எஸ்.கே பிலிம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், பிரபல மலேசிய இயக்குநர் எம்.எஸ் கலை (படம்) இயக்கத்தில் புதிதாக வெளிவரவிருக்கும் தொடர், ‘வேள்வி 2’.

கடந்த ஆண்டு KKMM (Kementerian Komunikasi Dan Multimedia Malaysia) மற்றும் ஆர்.டி.எம் ஆகியவை இணைந்து, மலேசியாவின் சிறந்த சமூக விழிப்புணர்வு கதைக்கான விருது வழங்கிய ‘வேள்வி’ தொடரின் இரண்டாம் பாகம் தான் ‘வேள்வி 2’.

நாட்டிலுள்ள தமிழ்ப் பள்ளிகளில் ஆசியர்கள் மற்றும் மாணவர்களிடையே உள்ள உறவை வலுப்படுத்தி, நல்ல சிந்தனையை வளர்க்கும் கதையம்சம் கொண்ட இந்த தொடரில் பிரபல உள்ளூர் கலைஞர்கள் பலரும் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

‘வேள்வி 2’ பாடலுக்கு மலேசிய இசையமைப்பாளர் தீபன் இசையமைத்துள்ளார்.

‘வேள்வி 2’ தொடரின் அறிமுக விழா, நேற்று மதியம் கோலாலம்பூரிலுள்ள விஸ்மா துன் சம்பந்தன் சோமா அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவை துணைக்கல்வி அமைச்சர் மாண்புமிகு ப.கமலநாதன் துவங்கி வைத்தார்.

‘வேள்வி 2’ வரும் மே 26 ஆம் தேதி முதல் அரசாங்க தொலைக்காட்சியான டிவி2 -ல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.