Home கலை உலகம் இந்தியாவின் மாபெரும் சக்திகள் நரேந்திர மோடி, ஜெயலலிதா – விஜய்

இந்தியாவின் மாபெரும் சக்திகள் நரேந்திர மோடி, ஜெயலலிதா – விஜய்

529
0
SHARE
Ad

vijayசென்னை, மே 19 – நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற நரேந்திர மோடிக்கும், ஜெயலலிதாவுக்கும் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,

“நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் இந்திய அளவில் ஓர் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் அதிக இடங்களை கைப்பற்றிய மோடி அவர்களுக்கும், தமிழகத்தில் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும்” எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக அளவில் மாபெரும் சக்தியாக திகழும் இந்த இரு தலைவர்களும் உலக அளவில் இந்தியாவை வல்லரசு நாடாகவும், இந்திய அளவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும் மாற்றி காட்டுவார்கள் என்ற கோடானு கோடி மக்களின் நம்பிக்கையில் நானும் ஒருவனாக இந்த வெற்றியை எண்ணி சந்தோஷமடைகிறேன் என கூறியுள்ளார் நடிகர் விஜய்.