Home Kajang by-Election அம்னோ ஊடகங்கள் பக்காத்தான் நிகழ்வுகளை பதிவு செய்யுமா?

அம்னோ ஊடகங்கள் பக்காத்தான் நிகழ்வுகளை பதிவு செய்யுமா?

497
0
SHARE
Ad

muhyiddin-anwarகாஜாங், மார்ச் 4 – காஜாங் இடைத்தேர்தலில் கண்ணியமான முறையில் பிரச்சாரம் செய்வோம் என்று துணைப்பிரதமர் முகைதீன் யாசின் கூறியதை, எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வரவேற்றுள்ளார்.

நேற்று இரவு பெற்றோர் ஆசிரியர் கழகம் (பிடிஏ) மற்றும் பல்வேறு அரசு சார்பற்ற இயக்கங்களின் 27 இந்திய பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய அன்வார், “முகைதீன் யாசின் கூறுவதை நான் வரவேற்கிறேன். ஆனால் அம்னோவுக்கு சொந்தமான ஊடகங்களான உத்துசான் மலேசியா, டிவி3 போன்றவை எங்களின் நிகழ்ச்சிகளை பதிவு செய்வதில்லை. இது முறையற்றதாகும். எனவே பிகேஆர் தொடர்பான நிகழ்ச்சிகளையும் அவர்கள் பதிவு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

காஜாங் இடைத்தேர்தல் குறித்து நேற்று கருத்துரைத்த முகைதீன், தாங்கள் பிகேஆருக்கு எதிராக கண்ணியமான முறையில் பிரச்சாரம் செய்யப்போவதாகவும், தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

காஜாங் இடைத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் அன்வாருக்கு எதிராக, தேசிய முன்னணி வேட்பாளராக மசீச கட்சியைச் சேர்ந்த டத்தின் படுகா சியூ மெய் பன் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.