Home இந்தியா மதச்சார்பின்மை என்ற பெயரில் எதிர்மறையான விஷயங்களை கூறி மக்களை முட்டாளாக்க முடியாது-நரேந்திர மோடி!

மதச்சார்பின்மை என்ற பெயரில் எதிர்மறையான விஷயங்களை கூறி மக்களை முட்டாளாக்க முடியாது-நரேந்திர மோடி!

471
0
SHARE
Ad

Narendra_Modiமுசாபர்பூர், மார் 4 – பீகார் முசாபர்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மற்றும் தே.ஜ கூட்டணியில் இணைந்த லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், அவரது மகன் சிராக் பஸ்வான் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டத்தில் சிராக் பஸ்வான் கலந்து கொள்வது இதுவே முதல் முறை.

இதில் நரேந்திர மோடி பேசியதாவது, பா.ஜ.க. தலைவர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் பற்றி, நான் கவலைப்படவில்லை. அப்பாவி மக்கள் மீது ஏன் தாக்குதல் நடத்த வேண்டும்?  ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபடுபவர்களால் இதை புரிந்துகொள்ள முடியாது. குண்டுவெடிப்புகள் மூலம் அவர்கள் என்னை தடுக்க நினைக்கின்றனர்.

முன்பு எதற்கெடுத்தாலும் பாகிஸ்தான் தீவிரவாதத்தின் மீதும், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ மீது பழிபோடுவது வழக்கமாக இருந்தது. தற்போது மதச்சார்பின்மை பற்றி பேசுவது பழகிவிட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறது என்றால், மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்கின்றனர். ஊழல் அதிகரித்து விட்டது என்றாலும், மதச்சார்பின்மைக்கு ஆபத்து என்கிறார்கள்.

#TamilSchoolmychoice

மதச்சார்பின்மை என்ற பெயரில் எதிர்மறையான விஷயங்களை கூறி மக்களை முட்டாளாக்கும் முயற்சியால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை.  3வது அணி என்றால் என்ன?  அதில் உள்ள பெரும்பாலானோர் காங்கிரஸை ஆதரிப்பவர்கள். 6 மாதத்துக்கு முன்பு 3வது அணி பற்றி கேள்வி பட்டீர்களா? தேர்தலை முன்னிட்டு இந்த அணி உருவாகியுள்ளது.

இது தேர்தலை கெடுக்கும். இந்த அணியால் நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை. பீகாரில் 23 சதவீத வீடுகளுக்கு மட்டுமே கழிப்பறை வசதியும், 16 சதவீத வீடுகளில் மட்டுமே மின்வசதியும் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2012-ஆம் ஆண்டில் பீகார் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 8.5 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. 10e825b4aa741c15651a5b4c5e916736இதுதான் நிதிஷ்குமார் செய்த வளர்ச்சி என மோடி பேசினார்.

கூட்டத்தில் பேசிய ராம் விலாஸ் பஸ்வான், ஏழை குடும்பத்தில் பிறந்த மோடி, ஏழைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வார். ஜாதி, மத ரீதியான அரசியலை மறந்து விடுங்கள். வளர்ச்சி அடிப்படையான அரசியலை நடத்துபவர்களை தேர்ந்தெடுங்கள். குஜராத்தில் கலவரம் 12 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. ஆனால் பீகாரில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது  என்றார் ராம் விலாஸ் பஸ்வான்.