Home இந்தியா தமிழக அரசியல் கட்சிகளுக்கு, இலங்கை பிரச்னை ஒரு வியாதியாக உள்ளது- நாராயணசாமி!

தமிழக அரசியல் கட்சிகளுக்கு, இலங்கை பிரச்னை ஒரு வியாதியாக உள்ளது- நாராயணசாமி!

592
0
SHARE
Ad

narayanasamy2சென்னை: இந்தியா இலங்கை மீனவ பிரதிநிதிகளின், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில், அதிகாரபூர்வ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும், என, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். டில்லியில் இருந்து, நேற்று காலை, சென்னை வந்த நாராயணசாமி, விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் இந்தியா இலங்கை பிரதிநிதிகள் பங்கேற்கும், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை, வரும் 13-ஆம் தேதி, இலங்கை தலைநகர், கொழும்பில் நடக்கிறது.

இதில், அதிகாரபூர்வ ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. பிரதமர் மன்மோகன் சிங், மியன்மர் சென்றுள்ளார். அங்கு அவர், இலங்கை அதிபர் ராஜபக்க்ஷேவை சந்திப்பது, மரியாதை நிமித்தமான ஒன்று.  மரபு ரீதியான சந்திப்பு. ஆனால், இதற்கு தமிழகத்தில் உள்ள, சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. தமிழக அரசியல் கட்சிகளுக்கு, இலங்கை பிரச்னை ஒரு வியாதியாக உள்ளது என அவர் கூறினார்.