Home இந்தியா முஸ்லிம்களை ஏமாற்ற பார்க்கிறார் ஜெயலலிதா-கருணாநிதி கண்டனம்!

முஸ்லிம்களை ஏமாற்ற பார்க்கிறார் ஜெயலலிதா-கருணாநிதி கண்டனம்!

835
0
SHARE
Ad

karunanithi111_28சென்னை, மார்ச் 7 – வழக்கம் போல முஸ்லிம்களை முதல்வர் ஜெயலலிதா  ஏமாற்றப் பார்க்கிறார். முஸ்லீம்களுக்கு ஏற்கனவே இடஒதுக்கீடு அளித்ததே திமுக ஆட்சிதான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.  முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டினை அதிகப்படுத்துவது குறித்து அவர்களின் கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார். ஆனால் அது வழக்கம் போல முஸ்லிம்களை ஏமாற்றப் பார்க்கிறார்.

முஸ்லிம்களுக்கு ஏற்கனவே இடஒதுக்கீடு அளித்ததே திமுக ஆட்சிதான். அந்த சதவீதத்தை அதிகப்படுத்த வேண்டுமென்று முஸ்லிம்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதைப்பற்றி உண்மையிலேயே அக்கறை இருந்தால், அந்தக் கோப்பினை உடனடியாக வரவழைத்து ஆணை பிறப்பித்திருக்கலாம். தற்போது அவர்களை ஏமாற்றுவதற்காக கோரிக்கையை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாகக் கூறி சமாளிக்கப் பார்க்கிறார்.

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி ஜெயலலிதா 2004-ஆம் ஆண்டு என்ன சொன்னார் தெரியுமா? முஸ்லிம்களுக்கு ஆந்திராவில் 5 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் தேர்தலின் போது இவ்வாறு வாக்குறுதி கொடுத்தீர்களே என்ற கேள்விக்கு ஜெயலலிதா அளித்த பதில் இல்லையே, அது தொடர்பாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லையே? என்பதுதான்.

#TamilSchoolmychoice

அதுமாத்திரமல்ல செய்தியாளர் ஜெயலலிதாவிடம் தொடர்ந்து, சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு கொடுப்பது பற்றி உங்கள் கருத்தென்ன? என்று கேட்டதற்கு, முஸ்லிம்கள் மட்டும் சிறுபான்மையினர் அல்ல. கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள், ஜெயின்கள் இருக்கிறார்கள், புத்த மதத்தினர் இருக்கிறார்கள், தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சமமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.

முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு அளித்தால், நாளை கிறித்தவர்களும் இட ஒதுக்கீடு கேட்பார்கள். மேலும் மற்ற சிறுபான்மையினரும் கேட்பார்கள். எனவே இவ்வாறு செய்வது இயலாத ஒன்றாகும். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் ஏற்கனவே பல சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். பெரும்பான்மை சமூகத்தினர் அந்தச் சலுகைகளை அனுபவிக்கவில்லை என்று கூறினார் ஜெயலலிதா. இந்தச் செய்தி அப்போதே ஏடுகளில் வெளிவந்தது பிறப்பிக்கப்பட்டு விட்டது என கருணாநிதி கூறியுள்ளார்.