Home இந்தியா ஜெயலலிதாவுக்கு எதிராக தி.மு.க. அணியில் இணைந்த கம்யூனிஸ்டு கட்சிகள்!

ஜெயலலிதாவுக்கு எதிராக தி.மு.க. அணியில் இணைந்த கம்யூனிஸ்டு கட்சிகள்!

414
0
SHARE
Ad

JAI-MAR-06-04சென்னை, மார்ச் 7 – அ.தி.மு.க.வால் கழற்றி விடப்பட்ட, கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க தயாராகி விட்டன. சென்னையில், நேற்று நடந்த  இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, அ.தி.மு.க. சீட் கொடுக்காததையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள், பரஸ்பரம் ஆலோசித்தனர்.

தங்கள் முடிவை, கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பின், தெரிவிப்பதாகக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட், நேற்று நிர்வாகக் குழுக் கூட்டத்தை கூட்டியது. கட்சியின் மாநில செயலளார், தா.பாண்டியன், துணை செயலளார், மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள், கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய மூத்த நிர்வாகி ஒருவர்,  நண்பர்களாக சேர்ந்தோம், நண்பர்களாக பிரிவோம் என, மார்க்சிஸ்ட் கட்சியிடம், அ.தி.மு.க. கூறியுள்ளது. நம்மிடம் எதையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

எனவே, அ.தி.மு.க. கூட்டணியில், தொகுதிகளைப் பெற காத்திருப்போம்  என்ற கருத்தை தெரிவித்தார். இதற்கு, பல நிர்வாகிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இடதுசாரி கூட்டணி என்பது, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக் கட்சிகள் அடங்கியது. இதில், யார் ஒருவருக்கு, ‘சீட்’ இல்லை என்றாலும், இடதுசாரிகள் அக்கூட்டணியில் நீடிக்க முடியாது. எனவே, ‘அ.தி.மு.க., கூட்டணியில் நீடிக்க முடியாது’ என்றனர்.

#TamilSchoolmychoice

இதையெல்லாம் கேட்ட, கட்சியின் மூத்த நிர்வாகிகள், அடுத்து என்ன செய்யலாம் என, யோசனை சொல்லுங்கள் என்று கூறியுள்ளனர். இதற்கு பதில் அளித்த பெருவாரியான நிர்வாகிகள் கூறியதாவது, தி.மு.க.,வுடன் கூட்டணி சேரலாம். காங்கிரஸ், பா.ஜ.,வை சரிசமமான தூரத்தில், தி.மு.க., வைத்துள்ளது.

தேர்தல் பிரசாரத்தை, மதசார்பற்ற அணி வெற்றிக்காக செய்ய வேண்டும் என, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். நிர்வாகிகளின் கோரிக்கையை, மாநில நிர்வாகக் குழு ஏற்றுக் கொண்டதாகவும், இக்கோரிக்கையை, கட்சியின் அகில இந்திய தலைமைக்கு தெரிவித்து அனுமதி பெறலாம் என, முடிவு செய்துள்ளதாகவும், இந்திய கம்யூனிஸ்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.