Home நாடு ஏப்ரல் 1முதல் இந்திய விசாவை நேரில் வந்து பெற வேண்டும்!

ஏப்ரல் 1முதல் இந்திய விசாவை நேரில் வந்து பெற வேண்டும்!

567
0
SHARE
Ad

India-Visaகோலாலம்பூர், மார்ச் 27 – வரும் ஏப்ரல் 1-முதல் இந்திய விசாவுக்கு மனு செய்கின்ற மலேசியர்கள் பயோமெட்ரிக் எனப்படும் கைரேகைப் பதிவு முறைக்கு நேரில் வரவேண்டும். மூன்றாம் தரப்பு மூலமாக இனி விசாவைப் பெற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா விசாவுக்கும், வர்த்தக விசாவுக்கும் மனு செய்கின்ற அனைத்து மலேசியர்களுக்கும் இந்த விதிமுறை அமல்படுத்தப்படுகிறது. இப்போது மற்றவர்கள் மூலமாகவோ அல்லது முகவர்கள் மூலமாகவோ மனுத்தாக்கல் செய்கின்றவர்கள், இனி அவ்வாறு மனுத்தாக்கல் செய்ய முடியாது.

மலேசியர்கள் அல்லாத வெளிநாட்டினர்களுக்கு, மாணவர், மருத்துவம், வேலைவாய்ப்பு ஆகிய விசாவுக்கு மனு செய்கின்றவர்கள், விதிக்கப்படுகின்ற இப்போதைய (பயோமெட்ரிக்) கைரேகைப் பதிவு முறைக்கு அப்பால் அனைத்து விசாவுக்கும் நேரடியாக வந்து மனுவை சமர்ப்பிக்க வேண்டும் என ஐவிஎஸ் குளோபல் செர்விஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

#TamilSchoolmychoice