Home உலகம் MH370: தாய்லாந்து துணைக்கோள் 300 பொருட்களைக் கண்டறிந்துள்ளது!

MH370: தாய்லாந்து துணைக்கோள் 300 பொருட்களைக் கண்டறிந்துள்ளது!

605
0
SHARE
Ad

MH370பேங்காக், மார்ச் 27 – இந்தியப் பெருங்கடலில் MH370 விமானத்தை தேடும் பகுதியில் இருந்து, சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் 300 பொருட்கள் மிதந்து கொண்டிருப்பதை தாய்லாந்து துணைக்கோள் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

இது குறித்து ஜியோ தகவல் மற்றும் விண்வெளி தொழில் நுட்ப மேம்பாட்டு முகமையின் இயக்குநர் அனாண்டு ஸ்னிட்வோங்ஸ் கூறுகையில், “தாய்லாந்து துணைக்கோள் இந்தியப் பெருங்கடலில் விமானம் விழுந்ததாக கூறப்படும் இடத்திலிருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் இந்த பொருட்களைக் கண்டறிந்துள்ளது. இந்த புகைப்படங்களை வெளியுறவுத்துறைக்கு அனுப்பி விட்டோம். அவர்கள் மலேசிய அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று பிரான்ஸ் நாட்டின் துணைக்கோள் அந்த பகுதியில் 122 பொருட்களைக் கண்டறிந்ததாக புகைப்படங்களை வெளியிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

இருப்பினும், தேடும் பணியில் ஈடுபட்டிருந்த விமானங்களும், கப்பல்களும் மோசமான வானிலை காரணமாக இன்னும் அந்தப் பொருட்கள் இருக்கும் பகுதியை நெருங்க முடியவில்லை என்று கூறப்படுகின்றது.