Home இந்தியா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடபோகும் கமல்ஹாசன்?

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடபோகும் கமல்ஹாசன்?

737
0
SHARE
Ad

Kamalசென்னை, மார்ச் 27 –  நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன், கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன் பிரசாரம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை என்றாலும், கமல்ஹாசன் கட்டாயம் பிரசாரத்துக்கு வருவார் என்று கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்களில் சிலர் கூறி வருகின்றனர்.

அரசியல் பற்றி தானோ அல்லது தனது படங்களிலோ பேசாத கமல்ஹாசன், ஒரு குறிப்பிட கட்சிக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட போகிறார் என்ற செய்தியால் தற்போது அரசியல் உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.