Home உலகம் ரஷ்யாவில் நடைபெற இருந்த ஜி-8 மாநாடு ரத்து – மேற்கத்திய நாடுகள் கூட்டு அறிவிப்பு!

ரஷ்யாவில் நடைபெற இருந்த ஜி-8 மாநாடு ரத்து – மேற்கத்திய நாடுகள் கூட்டு அறிவிப்பு!

615
0
SHARE
Ad

Russia-is-suspended-from-G8-group-of-countries-over-Ukraine-and-Crimea-region-crisisரஷ்யா, மார்ச் 27 – கிரிமிய இணைப்பு விவகாரத்திலும், உக்ரைன் மீது மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கை காரணமாகவும், ரஷ்யாவில் நடைபெற இருந்த ஜி-8 மாநாட்டை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகள் ரத்து செய்துள்ளன.

நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் நடந்த அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பின்னர் ஜி-7 நாடுகள் விடுத்துள்ள கூட்டறிக்கையில், “உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை.

அதனால் அந்நாட்டின் சோச்சி நகரில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஜி-8 மாநாட்டில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதனிடையே, “கிரிமிய இணைப்பு விவகாரத்தை காரணம் காட்டி ஜி-8 உறுப்பு நாடுகள் வேண்டுமென்றே ரஷ்யாவை தனிமைப்படுத்த முயற்சிக்கின்றன. இதனால் ரஷ்யாவிற்கு எவ்விதப் பின்னடைவும் இல்லை” என்று கிரெம்ளின் மாளிகைச் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

ஜி-8 மாநாடு புறக்கணிக்கப்பட்டாலும், ரஷ்ய இல்லாமல், அதே ஜூன் மாதத்தில் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடக்க இருக்கிறது குறிப்பிடத்தக்கது.