Home கலை உலகம் ஹரி இயக்கத்தில் விஷால்,ஸ்ருதிஹாசன்!

ஹரி இயக்கத்தில் விஷால்,ஸ்ருதிஹாசன்!

754
0
SHARE
Ad

hari-vishalசென்னை, மார்ச் 27 – ‘நான் சிகப்பு மனிதன்’ படத்துக்குப் பிறகு ஹரி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஷால். இதை விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கிறது. ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார்.

மேலும் சத்யராஜ், ராதிகா, சூரி, ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பிரியன். யுவன் சங்கர் ராஜா இசை. நா.முத்துக்குமார் பாடல்கள். படத்துக்கு ‘பூஜை’ என்று பெயர் வைத்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் ஹரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, கோவையில் நடக்கும் கதை இது. சாமிக்கு மட்டுமல்ல, ஆயுதங்களுக்கும் பூஜை போடலாம் என்பதுதான் படத்தின் கதை.

#TamilSchoolmychoice

‘தாமிரபரணி’ படத்துக்குப் பிறகு விஷாலுடன் மீண்டும் இணைகிறேன். இந்தப் படம் அவருக்கு வேறொரு இடத்தை தரும். ஸ்ருதிஹாசன் ஸ்டைலான, மாடர்ன் பெண்ணாக நடிக்கிறார்.

அவர் நடிப்பிற்கு முக்கியத்துவம் இருக்கும். ராதிகா, ரேணுகா, சித்தாரா, ஐஸ்வர்யா, அபிநயா உட்பட எட்டு நாயகிகள் நடிக்கின்றனர். கதையில் பாட்னா முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், போஜ்புரி நடிகர்கள் 3 பேர் நடிக்க இருக்கிறார்கள் என கூறினார் இயக்குநர்  ஹரி.