Home நாடு MH370: கறுப்புப் பெட்டியைக் கண்டறிந்த பிறகு தான் அரச விசாரணை – ‌ஷாஹிடன்

MH370: கறுப்புப் பெட்டியைக் கண்டறிந்த பிறகு தான் அரச விசாரணை – ‌ஷாஹிடன்

514
0
SHARE
Ad

amaran-shahidan-kassim-ngo-persatuan-parti-parlimenகோலாலம்பூர், மார்ச் 27 – மலேசிய விமானம் MH370 பேரிடரை விசாரணை செய்ய நாடாளுமன்ற தேர்வுக் குழுவோ (Parliamentary Select Committee) அல்லது அரச விசாரணை ஆணையமோ (Royal Commission of Inquiry) அமைக்க வேண்டும் என்ற பக்காத்தானின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்தது.

விமானத்தின் கறுப்புப் பெட்டியை கண்டறிந்த பிறகு தான் விசாரணை ஆணையம் அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என பிரதமர் துறை அமைச்சர் ஷாஹிடன் காசின் தெரிவித்துள்ளார்.

“கறுப்பு பெட்டியை தேடுவதில் தற்போது உள்ள கவனம் மாறி விடக்கூடாது. ஆகையால் இந்த இரு பரிந்துரைகள் குறித்து பின்னர் முடிவெடுப்போம்” என்று ஷாஹிடன் நாடாளுமன்றத்தில் இன்று சிரம்பான் மாநில ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் எழுப்பிய பரிந்துரைக்கு இவ்வாறு பதிலளித்தார்.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து லோக் கூறுகையில், “ஏர் பிரான்ஸ் 447 விமானம் கடலில் விழுந்து விபத்திற்குள்ளான போது, அதன் கறுப்புப் பெட்டியைக் கண்டறிய இரண்டு வருடங்கள் ஆனது. ஆனால் மலேசியாவிற்கு அவ்வளவு காலம் காத்திருக்கத் தேவையில்லை”

“காரணம், பாதுகாப்பு, குடிநுழைவு, இராணுவ ரேடாரில் விமானம் தென்பட்டது போன்ற ஆதாரங்களை வைத்து விசாரணை செய்யலாம். உலக அளவிலான ஊடகங்களின் விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டுமானால் விசாரணை குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்”

“ஒரு வேளை கறுப்புப் பெட்டி கிடைக்காமல் போனால் அதுவரை அரசாங்கம் விசாரணைக் குழு எதையும் அமைக்காமல் இவ்விவகாரத்தை கையாளப் போகிறதா?” என்றும் லோக் கேள்வி எழுப்பினார்.