நியூயார்க், மார்ச் 29 – அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பின்லேடனின் மருமகன் சுலைமான் அபு கெய்த். 2013–ஆம் ஆண்டு துருக்கி நாட்டில், அவர் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அமெரிக்க இரட்டை கோபுரங்கள் தகர்ப்பு மற்றும் சதி தொடர்பான வழக்கில் ‘சுலைமான் அபு’ குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2001-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், அமெரிக்கா ரெட்டை கோபுரங்கள் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது. பல்லாயிரம் மக்கள் இறந்தனர். இதற்கு காரணமான அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பின்லேடன், பின்னர் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார்.
இந்த சதியில் மூளையாகச் செயல்பட்டது, மற்றும் பிரான்சில் இருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் வெடிகுண்டை வைத்து தகர்க்க முயற்சி செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுலைமான் அபு மீது கூறப்பட்டிருந்தன. இது தொடர்பான வழக்கு நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள், சுலைமான் அபு, கெய்த் குற்றவாளி என தீர்ப்பு கூறினர். இவருக்கான தண்டனை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
குவைத் நாட்டை சேர்ந்தவரான இவர், பின்லேடனின் வலது கரமாகவும், அல்கொய்தா இயக்கத்தின் செய்தி தொடர்பாளராகவும் இருந்து வந்தார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிருபனமான நிலையில், ஆயுள் வரை அவர் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியது வரும் என்று தெரியவருகிறது.