Home வாழ் நலம் குக்கர் சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்!

குக்கர் சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்!

3656
0
SHARE
Ad

imagesஏப்ரல் 5 – நவீன சமையல் உபகரணங்கள் வேலைப்பளுவை குறைக்க உதவினாலும், அவற்றால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் பற்றி அவ்வப்போது சர்ச்சைகள் எழுவதுண்டு.

வாழ்க்கை முறை சார்ந்த பிரச்சனைகளை அவை தரும் என புகழ்பெற்ற மருத்துவர்களே சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக, ‘குக்கரில் சமைக்கப்படும் சாதத்தை சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும்’ என்கிற தகவல் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

வேலைக்கு போகிற அவசரத்தில் சீக்கிரம் எப்படி சமையலை முடிப்பது என கவலைப்படும் பெண்களுக்கு நவீன சமையல் உபகரணங்கள் பெரும் வரம் என்பதை மறுக்கமுடியாது.

#TamilSchoolmychoice

சமையலை எளிதாகவும் விரைவாகவும் செய்ய ஏராளமான பொருட்கள் வந்துவிட்டன. அதன் மூலம் செய்யப்படும் உணவுப்பொருட்களே பல நோய்களுக்குக் காரணமாகிறது என்கின்றனர் லைஃப் ஸ்டைல் மேனேஜ்மென்ட்டைச் சேர்ந்த நிர்வாக குழு.

குக்கரில் சாப்பாடு செய்வது எளிதானதுதான். ஆனால், அதனால் உடல் பருமன், சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகம் இருக்கிறது. வடித்து சமைக்கும் சாதத்தில் 30 முதல் 40 சதவிகிதம் மாவுச் சத்து (கார்போஹைட்ரேட்) குறைந்து விடும்.

ரத்த சர்க்கரை அளவை உடனடியாகவும் அது கூட்டாது. ஆனால், குக்கரில் சமைக்கும்போது அந்தச் சத்துகள் அப்படியே சாப்பாட்டில் முழுமையாக இருக்கும்.
ht1352
குக்கரில் வேக வைக்கப்படுகிற அரிசியில் கஞ்சி (மாவுச்சத்து) நீக்கப்படுவதில்லை. அதனால் கலோரி, குளுக்கோஸ் அளவு அதிகம். திடீரென ரத்த சர்க்கரை அளவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு.

சிலருக்கு புதிதாக சர்க்கரை நோயை உண்டு பண்ணும் அபாயமும் இருக்கிறது. நார்ச்சத்து நிறைந்த, கஞ்சி நீக்கப்பட்ட சாதமே சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்.

அரிசி வேக எவ்வளவு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதோ, அந்த அளவுக்கு அது சாப்பிட நல்லது. குறைந்த நேரத்தில் வேகும் சாப்பாட்டால் பிரச்சனைதான். அதிக நேரம் வெந்த சாப்பாட்டை ஒரு கப் சாப்பிட்டாலே வயிறு நிரம்பி விடும்.

வேகமாக தயாரான சாப்பாட்டை 2 மடங்கு எடுத்துக்கொண்டால்தான் வயிறு நிரம்பும். இப்படி வயிற்றுக்குள் உணவைத் திணிக்கத் திணிக்க பிரச்சனைகளும் அதிகமாகும்.  முடிந்தவரை இவற்றையெல்லாம் தவிர்த்தல் நல்லது என்கின்றனர் லைஃப் ஸ்டைல் மேனேஜ்மென்ட்டைச் சேர்ந்த நிர்வாக குழு.