இலங்கை, ஏப்ரல் 5 – அயல்நாடுகளில் இயங்கி வரும் புலம்பெயர்ந்த 16 தமிழ் அமைப்புகளுக்கு இலங்கையில் தடை விதித்துள்ள இலங்கை அரசு, அடுத்ததாக,அயல்நாடுகளில் இயங்கிவரும் தமிழ் ஊடகங்களுக்கும் தடைவிதிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவியவருகின்றது.
இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த மக்களின் தமிழ் தேசிய செயற்பாடுகளில், அயல்நாடுகளில் இயங்கும் தமிழ் ஊடகங்கள் பெரும் பங்கினை வகித்து வருகின்றன.
இதன்அடிப்படையில் ஏற்கனவே குறிப்பிட்ட சில இணையத்தள செய்தி ஊடகங்களை இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளது.
தற்போது இதற்கான இரகசிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் விரைவில் இத்தகைய ஊடகங்களை அதிகாரப்பூர்வமாக தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கசிகின்றன.