Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசியாவில் டொயோட்டாவின் ஆல்பார்ட் மற்றும் ப்ரிவியா கார்கள் அறிமுகம்!

மலேசியாவில் டொயோட்டாவின் ஆல்பார்ட் மற்றும் ப்ரிவியா கார்கள் அறிமுகம்!

680
0
SHARE
Ad

toyottaப்ரல் 5 – மலேசியாவில் டொயோட்டா கார்களின் அதிகாரப்பூர்வ விற்பனையாளரான ‘யூஎம்வி டொயோட்டா மோட்டார்ஸ்’ நிறுவனம் வாடிக்கையாளர்களின் பல தரப்பட்ட பயன் பாடுகளுக்காக டொயோட்டா ‘ஆல்பார்ட்’ (Alphard) மற்றும் ‘ப்ரிவியா’ (Previa) என்ற இரு புதிய ரக கார்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் கூறுகையில், “இதற்கு தனியார் இறக்குமதியாளர்கள் மூலம் ஜப்பானில் இருந்து மட்டுமே வாரண்டி இன்றி பெறப்பட்டு வந்த இந்த இரு கார்களும், தற்போது வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் விருப்பங்களுக்காக மலேசியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது ” என்று கூறியுள்ளது.

டொயோட்டா  ப்ரிவியா காரின் சிறப்பு அம்சங்கள்:-

#TamilSchoolmychoice

சிறப்பான வடிவமைப்பு பெற்றுள்ள 2.4GL ரக ப்ரிவிய கார்கள், ஏழு நபர்கள் போதுமானதாக அமருவதற்கான இருக்கைகள், இருபுறமும் திறக்கக் கூடிய பெரிய அகலமான கதவுகள், பயணிகள் பாதுகாப்பிற்கான இரு ஏர்பேக்குகள், Anti lock braking system (ABS) மற்றும் electronic brake-force distribution (EBD) போன்றவற்றைக் கொண்டுள்ளது. இதன் விலை RM258,017 (காப்பீட்டுடன் சேர்த்து).

டொயோட்டா ஆல்பார்ட் காரின் சிறப்பு அம்சங்கள்:-

2.4 மற்றும் 3.5-லிட்டர் என்று இரு வகைகளில் வந்துள்ள ஆல்பார்ட் கார்கள், ஆடம்பரமான உள் மற்றும் வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டுள்ளது. மேலும் ஏழு நபர்கள் போதுமானதாக அமருவதற்கான இடவசதி, ABS, EBD அமைப்புகள், தானியங்கிக் கதவுகள் மற்றும் வாகன ஸ்திரத்தன்மைக்கான கட்டுப்பட்டு அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
தி ஆல்பார்ட் 2.4G மற்றும் 3.5G விலைகள் முறையே RM338,000 மற்றும் RM398,000 (காப்பீட்டுடன் சேர்த்து).

ஜப்பானின் டொயோட்டா நிறுவனத்தின் நேரடித் தயாரிப்பான இந்த கார்களுக்கு அந்நிறுவனம்,  3-வருடம் அல்லது 100,000 km கான வாரண்டியை அளிக்கிறது.