Home One Line P1 15 புதிய டொயோட்டா கேம்ரியை தலா 184,000 ரிங்கிட்டுக்கு பினாங்கு அரசு வாங்குகிறது!

15 புதிய டொயோட்டா கேம்ரியை தலா 184,000 ரிங்கிட்டுக்கு பினாங்கு அரசு வாங்குகிறது!

1023
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பினாங்கு மாநில அரசின் அதிகாரப்பூர்வ காராக 2019-ஆம் ஆண்டு டொயோட்டா கேம்ரி 2.5 மாதிரியை பயன்படுத்த உள்ளதாக கடந்த மார்ச் 13-ஆம் தேதியே மாநிலம் அறிவித்திருந்தது என்று மாநில நிதி அதிகாரி சாருல் பாஹியா அபு தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், வரி விலக்கு இல்லாமல், ஒரு கார் 184,912.50 ரிங்கிட் என்று சாருல் கூறினார்.

இருப்பினும், விற்பனையாளருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ஒவ்வொரு காருக்கும் 4,990 ரிங்கிட் தள்ளுபடி பெற முடிந்ததுஎன்று சாருல் கூறினார்.

#TamilSchoolmychoice

தற்போதைய அதிகாரப்பூர்வ கார்கள், இந்த புதிய கேம்ரி மாதியுடன் மாற்றப்படும், ஏனெனில் எதிர்பார்க்கப்படும் பராமரிப்பு செலவு குறைவாக உள்ளதோடு, சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, கெராக்கான் துணைத் தலைவர் ஓ டோங் கியோங் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு உத்தியோகபூர்வ கார்களை மாற்றுவதற்காக மாநில அரசை விமர்சித்திருந்தார்.

கெராக்கான் மாநில அரசாக இருந்தபோது, ​​அவற்றை மாற்றுவதற்கு முன்பு 15 ஆண்டுகளாக நாங்கள் அதே கார்களைப் பயன்படுத்தினோம். பினாங்கு அரசாங்கம் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் கார்களை மாற்றுமா?” என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

தற்போதைய அதிகாரப்பூர்வ கார்களானம் டொயோட்டா கேம்ரி, ஆறு ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளன என்றும், மேலும் அவற்றின் உத்தரவாத காலம் காலாவதியானது என்றும் சாருல் கூறினார்.