Home One Line P1 காஷ்மீர்: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடுவர் தேவையில்லை!- பிரான்ஸ் அதிபர்

காஷ்மீர்: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடுவர் தேவையில்லை!- பிரான்ஸ் அதிபர்

1007
0
SHARE
Ad

பிரான்ஸ்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான காஷ்மீர் விவகாரப் பிரச்சனை இருதரப்பு சம்பந்தப்பட்டது எனவும், அதில் வேறு யாரும் தலையிடத் தேவையில்லை என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் கூறியுள்ளார்.

பிரான்ஸில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு இமானுவேல் மக்ரோங்கின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வருகிற சனிக்கிழமையன்று பிரான்ஸில் தொடங்கவுள்ள ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்கு நரேந்திர மோடி அங்கு சென்றுள்ளார்.

#TamilSchoolmychoice

நரேந்திர மோடி மற்றும் இமானுவேல் மக்ரோங் ஆகிய இரு தலைவர்களும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் பின்னர் இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த செவ்வாய்கிழமையன்று காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக தாங்கள் அனைத்துலக நீதிமன்றத்தை நாடப் போவதாக பாகிஸ்தான் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.