சான் பிரான்சிஸ்கோ, ஏப்ரல் 5 – மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த புதன் கிழமை சான் பிரான்சிஸ்கோவில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனது மேம்படுத்தப்பட்ட விண்டோஸ் 8.1 இயங்குதளத்துடன் கூடிய விண்டோஸ் போன் 8.1 – ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பில் மிகச் சிறந்த தொழில்நுட்பக் கூறுகளைக் கொண்டுள்ள விண்டோஸ் போன் 8.1 பயனர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும் எனக் கூறப்பட்டது.
இதன் முதன்மையான அம்சங்கள் பற்றி அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் கூறியிருப்பதாவது:-
1. ‘ஆப்பிளின் சிறி’ (Apple’s Siri) போன்று செயல்படும் Cortana வசதி, விண்டோஸ் போன் 8.1-ன் மைக்ரோசாஃப்-கான ‘டிஜிட்டல் அஸிஸ்டன்ட்’ (Digital Assistant) எனக் கூறப்படுகின்றது. இந்த Cortana வசதியின் மூலம், பயனர்கள் தங்கள் தொலைபேசித் தொடர்புகள், கடவுச்சொற்கள், இடம் மற்றும் சந்திப்புகள் பற்றிய விவரங்களை சேகரித்து வைக்க இயலும். இதனை ஸ்டார்ட் திரையில் உள்ள Live Tile என்பதன் மூலம் இயக்கமுடியும். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த
Cortana வசதியின் மேம்பாடுக்காக வேறு சில செயலிகளுடன் இணைந்து செயல் பட இருக்கிறது.
2. பயனர்களின் திறன்பேசிப் பயன்பாடுகளின் தேவைகளைக் கருதி உருவாக்கப்பட்டுள்ள இந்த வசதியின் மூலமாக பயனர்கள் தங்கள் திறன்பேசிகளின் சேமிப்புக் கலன்களின் செயல்பாடுகள் மற்றும் அதன் விவரங்கள், flight mode, wifi, Bluetooth குறித்த அறிவிப்புகள் ஆகியவற்றை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
3. விண்டோஸ் போன் 8.1 – கான விசைப்பலகைகளை, பயனர்கள் இலகுவாக பயன்படுத்துவதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. Swyple-like functionality என பெயரிடப்பட்டுள்ள, இந்த விசைப்பலகைகளின் செயல்பாடுகள், பயனர்கள் குறுஞ்செய்திகள் அனுப்புகையில் சிறந்த செயல்திறனைக் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.
4. சாதாரண அழைப்புகளையும் Skype-ன் காணொளி அழைப்புகளாக மாற்றும் வசதிகொண்ட புதிய Skype செயலி, இந்த விண்டோஸ் போன் 8.1 ல் செயல்படுத்தப்பட்டுள்ளது.
5. பயனர்கள் விண்டோஸ் போன் 8.1 மூலம் இருந்த இடங்களிலிருந்தே அருகில் உள்ள Public Wifi Hotspot களை அறிந்துகொள்ள Wifi Sense வசதி பயன்படுகிறது. இந்த வசதி பயனர்களுக்கு மிகுந்த வியப்பளிக்கும் என நம்பப்படுகிறது.
6. விண்டோஸ் போன் 8.1 உள்ள Storage Sense வசதி மூலம் பயனர்கள், தங்கள் தகவல்கள் மற்றும் தரவுகளை SD நினைவக அட்டைகளில் எளிதாக கையாள இயலும்.
7.ஒரு வாரத்திற்கான மொத்த கால அட்டவணைகளையும் முன்னரே மேம்பாடுத்திக் கொள்ளுதல், கையாளுதல் போன்றவற்றை சரியாகவும், எளிதாகவும் செய்ய இந்த Calendar வசதி, ஏற்கனவே உள்ள விண்டோஸ் போன்களைக் காட்டிலும் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற வசதிகள் மட்டுமல்லாமல், பல புதிய தொழில்நுட்ப அம்சங்கள், சிறப்பான செயலிகளைக் கொண்டுள்ள விண்டோஸ் போன் 8.1 வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.