Home உலகம் ஆப்கன் அதிபர் தேர்தலில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா முன்னிலை!

ஆப்கன் அதிபர் தேர்தலில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா முன்னிலை!

619
0
SHARE
Ad

911806b5-fade-40a6-9cab-6203894319f9_s_secvpfஏப்ரல் 14 – ஆப்கானிஸ்தானில் அதிபராக உள்ள ஹத்கர் சாய் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து கடந்த 5-ஆம் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் போட்டியிட்ட ஆப்கனிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா எதிர் வேட்பாளரான அஷ்ரப் கனியை விட சுமார் 4% முன்னணியில் உள்ளார் எனத் தகவல் வருகின்றன.

ஆப்கனில் மொத்தமுள்ள 34 மாகாணங்களில் 26 மாகாணங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் 10 சதவிகித வாக்குகளே தற்போது எண்ணப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இதில் அப்துல்லாவிற்கு 41.9 சதவிகித வாக்குகளும், கனிக்கு 37.6 சதவிகித வாக்குகளும், சல்மா ரசூலுக்கு 9.8 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு தலைமை தேர்தல் ஆணையரான அகமது யூசுப் நுரிஸ்தானி கூறுகையில், “தற்போதய நிலையில் அப்துல்லா முன்னணியில் இருக்கிறார். இது முதற்கட்ட நிலவரம் தான்.

இதை வைத்துக்கொண்டு எந்த முடிவையும் எடுக்கமுடியாது. எந்த வேட்பாளருக்கும் 50 சதவிகித வாக்குகள் கிடைக்காவிட்டால், முதல் 2 இடங்களை பிடிக்கும் வேட்பாளர்களுக்கிடையே மே 28 அன்று மீண்டும் தேர்தல் நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

ஆப்கனின் நீண்ட கால தேர்தல் முறையில் வரும் ஜுலை மாதம் தான் வெற்றியாளர் யார் என்று தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.