ஏப்ரல், 14 – முன்பு கற்றாழை பயன்படுத்தி இருந்தால் அதன் பயன்பாடு, ஆரோக்கிய நலன்கள் ஆகியவை பற்றி தெரிந்திருக்கும். முகத்தை அழகுபடுத்த காயங்கள், சூடுகளில் ஏற்படும் கட்டி மறைய என பலவற்றிற்கு கற்றாழை பயன்படுகிறது.
ஆனால் கற்றாலையை உட்கொள்வதால் ஏற்படும் உடல் நல நன்மைகளை தெரிந்து கொள்வோம். கற்றாழையை பொதுவாக அழுத்த “எதிர்ப்பி” என அழைக்கிறோம். இது உடலை தேவைக்கேற்றபடி மாற்றியமைக்கிறது.
இவை இயற்கையிலே பல்வேறு சத்துக்களை கொண்டுள்ளது. இயற்கை சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள். இது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள கற்றாலை உதவுகிறது.
கற்றாழைச் சாறு போதையை நீக்க செயலாக செயல்படுகிறது. தோல் நீக்கிய சோற்றை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்து உண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், மலச்சிக்கல் போகும்.
தோல் நீக்கிய சோறு கசப்பில்லாத வகையும் உள்ளது. ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும். கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன்படுகிறது.
இதனின் சாற்றை தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும். முக அழகு சாதனமாகப் பயன்படுகிறது. இதன் இலையை மஞ்சள் நிறத் திரவமும் தேனும் கலந்துண்டால் இருமல் சளி போகும்.
வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகளை வெளியேற்றுகிறது. எரிசாராயத்துடன் கலக்கி முடிக்குப் போட்டால் முடிவளரும், நிறம் கருமையடையும்.
இதன் சாற்றை பதப்படுத்தி குளிர்பானமாகவும் பயன் படுத்தப்படுகிறது. வேறை சுத்தம் செய்து பால் ஆவியில் அவித்து உலர்த்திப் பொடி செய்து 15 மில்லி பாலுடன் கொடுக்க சூட்டு நொய்கள் தீரும். ஆண்மை நீடிக்கும்.