Home வாழ் நலம் மூல நோயை குணமாக்கும் பசலைக் கீரை!

மூல நோயை குணமாக்கும் பசலைக் கீரை!

2005
0
SHARE
Ad

ht729மே 16 – பசலைக் கீரை கீரை வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது. நீர்ச்சத்து நிறைந்த கீரை. சிறுநீரைப் பெருக்கும், பசியைத் தூண்டும் வல்லமை பெற்றது. வைட்டமின் ஏ, சி மற்றும் புரதம், இரும்பு, கால்சியம் போன்றவை சத்துக்கள் உள்ளன.

மூல நோய் பிரச்சனை இருப்பவர்களுக்கு பசலைக் கீரை மிகவும் நல்லது. மூல நோய் ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்களை, எந்தவித சிகிச்சைகளும் இல்லாமல், இந்தக் கீரையின் மூலமே குணப்படுத்திவிட முடியும்.

நீர்க்கடுப்பு, நீரடைப்பு குணமாகும். சருமப் பிரச்சனைகள் தீரும். நோய்த் தொற்றைப் போக்கும். வாய்ப்புண்களை ஆற்றும். கருணைக் கிழங்கு, வெங்காயம் மற்றும் பசலை சேர்த்து சமைத்து, சாப்பிட்டுவர ஆரம்பக்கட்ட மூல நோயைக் குணப்படுத்தும்.

#TamilSchoolmychoice

spinachசளி இருமல் பிரச்சனை மற்றும் வழுப்பு நோய் இருப்பவர்கள் மழைக்காலத்தில் இந்தக் கீரையைத் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இந்த கீரையில் அதிக நீர்ச்சத்து உள்ளதால், சளி இருமல் பிரச்சனை உள்ளவர்களை வெகுவாக இது பாதிகும்.