திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், மு.க.தமிழரசுவின் மகனுமான நடிகர் அருள்நிதிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ண தாசனின் மகள் கீர்த்தனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
தனது தம்பி மகனின் திருமணத்துக்காக முக்கிய பிரமுகர்களை சந்தித்து அழைப்பிதழ் வழங்கும் பணியில் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்.
இதன்படி, தேமுதிக தலைவர் விஜய்காந்தை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் நேற்று சந்தித்த மு.க.ஸ்டாலின், அருள்நிதியின் திருமண அழைப் பிதழை வழங்கினார்.
இதற்காக மு.க.ஸ்டாலினும் அவரது தம்பி மு.க.தமிழரசுவும் நேற்று மதியம் 12.05 மணியளவில் தேமுதிக அலுவலகம் சென்றனர். விஜய்காந்த், ஸ்டாலின் இடையேயான இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.
ஏற்கெனவே, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், திக தலைவர் கி.வீரமணி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் திருமண அழைப்பிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.