Home நாடு கோலாலம்பூரில் டிஜிட்டல் இந்தியா கண்காட்சி அதிகாரப்பூர்வமாக துவங்கியது!

கோலாலம்பூரில் டிஜிட்டல் இந்தியா கண்காட்சி அதிகாரப்பூர்வமாக துவங்கியது!

680
0
SHARE
Ad

IMAG2665

கோலாலம்பூர், மே 16 – கடந்த மார்ச் மாதம் தொடங்கி, எதிர்வரும் ஜூன் மாதம் வரையில், கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியத் திருவிழாவின் முக்கிய அங்கமாக டிஜிட்டல் இந்தியா கண்காட்சி இன்று தலைநகர் மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் தொடங்கியது.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமீடி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பதாக இருந்த இந்த விழாவில், இறுதி நேரத்தில் அவர் விழாவுக்கு வர இயலாமல் போன காரணத்தினால், அவருக்குப் பதிலாக செனட்டரும் கிம்மா(KIMMA) தலைவருமான டத்தோ சையத் இப்ராகிம் பின் காதிர் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

#TamilSchoolmychoice

இந்த விழாவில் பேசிய இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள அதிநவீன முன்னேற்றங்கள் குறித்தும், மலேசியா மற்றும் இந்தியாவிற்கு இடையில் அறிவியல், தொழில்நுட்பத்தில் இருந்து வரும் நட்புறவு குறித்தும் பேசினார்.

இந்த கண்காட்சிக்கு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிநுட்ப வல்லுநர்கள் என என பலர் கலந்து கொண்டனர்.