Home கலை உலகம் இந்தியக் கலாச்சாரத்தை அழிக்கிறார் – சன்னி லியோன் மீது சிபிஐ போலீசார் வழக்குப் பதிவு!

இந்தியக் கலாச்சாரத்தை அழிக்கிறார் – சன்னி லியோன் மீது சிபிஐ போலீசார் வழக்குப் பதிவு!

810
0
SHARE
Ad

sunny-leoneபுதுடெல்லி, மே 16 – ஆபாசத்தை ஊக்குவிப்பதாகவும், இந்திய சமூகத்தையும் கலாச்சாரத்தையும் அழிக்கிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் மீது சிபிஐ சிறப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மும்பையில் செயல்படும் ஒரு இந்து அமைப்பு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளது. அதில் “பாலிவுட் நடிகையான சன்னி லியோனின் இணையதளத்தில் இருக்கும் காணொளி மற்றும் இதர படங்கள் மக்களிடையே ஆபாசத்தை ஊக்குவிப்பதுடன், இந்திய சமூகத்தையும் கலாச்சாரத்தையும் அழிக்கும் வகையில் உள்ளது”.

“ஆகையால், அவர் பெயரில் இருக்கும் இணையத்தளத்தை தடை செய்ய வேண்டும் என்றும், அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கு தொடுத்துள்ளார்.  இதை ஏற்கொண்ட காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது”.

#TamilSchoolmychoice

“இணையத்தளம் உடனடியாக தடை செய்யப்படாது என்று கூறியுள்ள காவல்துறை, வழக்கை சிபிஐ சிறப்புப் பிரிவுக்கு மாற்றியுள்ளது. இணையத்தில் ஆயிரக்கணக்கான ஆபாச இணையதளங்கள் இருக்கின்றன. அவற்றின் மீது ஏன் வழக்கு தொடுக்கவில்லை என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்”.

“மேலும் ஒரே ஒரு ஆபாச இணையம்,  இந்திய சமூகத்தையும் கலாச்சாரத்தையும் அழிக்க கூடிய வகையில்,  இந்திய சமூகமும் அதன் கலாச்சாரமும் பலகீனமாக உள்ளதா” என்றும் கேள்வி சில தரப்பினர் எழுப்பியுள்ளனர்.