Home Featured கலையுலகம் சன்னி லியோனிடம் 100 கோடி நஷ்டஈடு கேட்டு பூஜா மிஸ்ரா வழக்கு!

சன்னி லியோனிடம் 100 கோடி நஷ்டஈடு கேட்டு பூஜா மிஸ்ரா வழக்கு!

1086
0
SHARE
Ad

sunny_Leon_25மும்பை – தனக்கு தீங்கு இழைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதற்காக பிரபல இந்தி நடிகை சன்னி லியோனிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு மாடல் அழகி பூஜா மிஸ்ரா வழக்கு தொடர்ந்துள்ளார்.

சன்னி லியோனும், பூஜா மிஸ்ராவும், தனியார் டிவி நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில் சன்னி லியோன் மீது பூஜா மிஸ்ரா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, ‘‘என் மீது நடிகை சன்னி லியோன் அவதூறான கருத்துக்களை பரப்பினார். அதனால் நான் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேன்.

#TamilSchoolmychoice

காழ்ப்புணர்ச்சியுடன் பத்திரிகைகளில் என்னைப் பற்றி தவறாக பேட்டி அளித்து என்னை சமுதாயத்தில் தவறாக சித்தரித்து விட்டார். எனவே சன்னி லியோன் எனக்கு ரூ.100 கோடி இழப்பீடு தர உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

நீதிபதி நரேஷ் பாட்டீல் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது பூஜா மிஸ்ரா கோர்ட்டில் ஆஜராகாததால் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் வரும் ஜூன் மாதம் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.