Home Featured கலையுலகம் ஐதராபாத் மாநகராட்சி இணையத்தளத்தில் சன்னி லியோனின் ஆபாச படம்!

ஐதராபாத் மாநகராட்சி இணையத்தளத்தில் சன்னி லியோனின் ஆபாச படம்!

1096
0
SHARE
Ad

senny leyonஐதராபாத் – ஐதராபாத் மாநகராட்சி இணையத்தளத்தில் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் ஆபாச புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நல்லாட்சி மையத்தால் பராமரிக்கப்படும் ஐதராபாத் நகராட்சி இணையத்தளத்தில் நடிகை சன்னி லியோனின் ஆபாச புகைப்படம் வெளியாவதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பொதுமக்களும் இதனை பார்த்து அதிருப்தியடைந்து மாநகராட்சிக்கு புகார் அளித்தனர்.

மாநகராட்சி அதிகாரிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய இந்த புகைப்படத்தை இணையத்தளத்தில் இருந்து நீக்க அதிகாரிகள் நீண்ட நேரம் போராடினர். தொழில்நுட்ப பிரிவின் உதவியுடன் நாள் முழுக்க போராடி சன்னி லியோனின் ஆபாச புகைப்படத்தை இணையத்தளத்தில் நீக்கினர்.

#TamilSchoolmychoice

இணையத்தளம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு அந்த புகைப்படம் வெளியானதா அல்லது மாநகராட்சியில் இருப்பவர்களே இந்த செயலில் ஈடுபட்டார்களா என்பது உறுதி செய்யப்படவில்லை. இது குறித்து காவல் துறையில் எந்தவித புகாரும் வராததால் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.