Home Featured வணிகம் பேங்க் நெகாராவின் புதிய ஆளுநராக முகமட் இப்ராகிம் நியமனம்!

பேங்க் நெகாராவின் புதிய ஆளுநராக முகமட் இப்ராகிம் நியமனம்!

600
0
SHARE
Ad

Muhammad Ibrahimகோலாலம்பூர் – பேங்க் நெகாராவின் புதிய ஆளுநராக தற்போதைய துணை ஆளுநர் டத்தோ முகமட் இப்ராகிம் நியமிக்கப்பட்டுள்ளார்.

வரும் மே 1-ம் தேதி முதல் அவர் பதவிக்காலம் தொடங்குவதாக பிரதமர் அலுவலகம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் 30-ம் தேதியோடு, நடப்பு ஆளுநர் டான்ஸ்ரீ டாக்டர் சேத்தி அக்தான் அசிஸ் ஓய்வு பெறுவதையடுத்து, அதற்கு அடுத்தநாள் முதல் முகமட் பேங்க் நெகாராவிற்குத் தலைமையேற்கிறார்.

#TamilSchoolmychoice