Home Featured தமிழ் நாடு தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதாவுக்கு எதிராக சாட்சியங்கள் உருவாக்கப்பட்டன – ஜெயலலிதா வழக்கறிஞர் வாதம்!

தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதாவுக்கு எதிராக சாட்சியங்கள் உருவாக்கப்பட்டன – ஜெயலலிதா வழக்கறிஞர் வாதம்!

680
0
SHARE
Ad

jayalalitha-ne-600புதுடெல்லி – சொத்துக்குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வருகிறது.

11-ஆவது நாளான நேற்றைய விசாரணையில், ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் எல்.நாகேஸ்வரராவ் தனது வாதங்களை தொடர்ந்தார். அவர் கூறியதாவது:- ஜெயலலிதாவிடம் இருந்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு இடையில் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறப்படுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஆகும்.

அது போன்று எந்த விதமான பணப்பரிவர்த்தனைகளும் நடைபெறவில்லை. ஒரே வீட்டில் தங்கியிருந்தார்கள் என்பதற்காக அவர்கள் இடையே பணப்பரிவர்த்தனை நடைபெற்றது என்று விசாரணை அமைப்பு குற்றம் சாட்டும்போது அதனை நிரூபிக்கும் வகையில் எந்த விதமான ஆதாரத்தையும் அவர்கள் முன்வைக்கத் தவறிவிட்டனர்.

#TamilSchoolmychoice

ஜெயலலிதா, மற்றவர்களை பினாமிகளாக பயன்படுத்தி சொத்து மதிப்பை உயர்த்தினார் என்று கர்நாடக அரசு கூறுவதற்கு இதுவரை எந்த விதமான ஆதாரங்களும் கிடையாது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஊகங்களின் அடிப்படையில் கூறப்பட்டவை.

1996-இல் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது இந்த வழக்கு சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்படும் வகையில் அரசு அதிகாரிகளுக்கு மிகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவர்கள் கடுமையாக நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

சாட்சியங்களும் ஜெயலலிதாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டன என ஜெயலலிதா வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் வாதாடினார். இன்றும் அவர், ஜெயலலிதா தரப்பில் தன் வாதங்களை தொடர்கிறார்.