Home இந்தியா ஆந்திராவில் 2,400 கிராமங்களைத் தத்தெடுக்க அமெரிக்கவாழ் இந்தியர்கள் முடிவு!

ஆந்திராவில் 2,400 கிராமங்களைத் தத்தெடுக்க அமெரிக்கவாழ் இந்தியர்கள் முடிவு!

716
0
SHARE
Ad

New-Telangana-Map(C)ஆந்திரப் பிரதேசம், மே 16 – ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 2,417 கிராமங்களைத் தத்தெடுக்க அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் முடிவு செய்துள்ளனர் என்று ஆந்திர முதல்வரும், தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தெரிவித்தார்.

தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர், இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

“அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ், சிக்காகோ, நியூயார்க், நியூஜெர்ஸி, வாஷிங்டன், டல்லாஸ் உள்ளிட்ட பல நகரங்களுக்குச் சென்று அங்கு வாழும் இந்தியர்களைச் சந்தித்தேன்”.

#TamilSchoolmychoice

“அப்போது, அவர்களிடம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் முதலீடு செய்யுமாறு கோரினேன். முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான ‘நவீன கிராமம்-நவீன வார்டு’ திட்டத்தினால் ஈர்க்கப்பட்ட அமெரிக்கவாழ் இந்தியர்கள், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 2,417 கிராமங்களைத் தத்தெடுக்க முடிவு செய்துள்ளனர்”.

“ லூஸியானா ஆளுநரும், இந்திய அமெரிக்கருமான பாபி ஜிண்டால், டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபாட், சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனர் வினோத் கோஸ்லா, அடோப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாந்தனு நாராயண் உள்ளிட்டோரைச் சந்தித்து ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்தும், அங்கு முதலீடு செய்வது குறித்தும் எடுத்துரைத்தேன்” என்று நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

கிராமங்களின் முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டு, மக்களின் பங்களிப்பு இருக்கும் வகையில் “நவீன கிராமம்-நவீன வார்டு’ திட்டத்தை சந்திரபாபு நாயுடு வகுத்துள்ளார் என அவர் தெரிவித்தார்.