Home வாழ் நலம் பெருங்குடல் புற்றுநோயை குணமாக்கும் புதினா!

பெருங்குடல் புற்றுநோயை குணமாக்கும் புதினா!

1105
0
SHARE
Ad

mint-1மே 8 – நம் முன்னோர் தங்களுக்கு வரும் நோய்களை, உணவில் மாற்றங்கள் செய்ததன் மூலம் போக்கிக் கொண்டனர். இந்த வரிசையில் தமிழர்களின் உணவில் அடிக்கடி இடம்பெறும் ஒரு தாவரம் புதினா.

மடிந்த விளிம்புகளுடன் கூடிய பச்சை இலைகளுடன் காணப்படும் புதினா அபாரமான மணமும், ருசியும் கொண்டது. புதினா ஒரு புதிரான தாவரமும் கூட.

புதினாவில் வயல் புதினா, கார்ன் புதினா, ஜப்பானிய புதினா என 40 வகை புதினாக்கள் இருக்கின்றன. இதில் ஏ, பி, சி, வைட்டமின்கள், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், சுண்ணாம்பு, நார், புரதம் என்று பல்வேறு சத்துகளும் நிரம்பி உள்ளன.

#TamilSchoolmychoice

இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் பெருங்குடல் புற்றுநோயை தீர்க்கும் என்று மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது. புதினாவில் உள்ள மருத்துவசக்தி அபாரமானது.

பத்து புதினா இலைகளை கழுவி பச்சையாக அப்படியே மென்று சாப்பிடலாம். அல்லது புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தலாம்.

புதினா, வயிற்றுவலி, அஜீரணம், வாயுத் தொல்லை, மலச்சிக்கல், உப்புசம், வயிற்றுப்போக்கு உள்பட பல வயிற்றுக் கோளாறுகளை தீர்த்து விடுகிறது.

66454_473911822666406_1552642561_nஇதன் தண்டுகளையும், இலைகளையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் தேன், எலுமிச்சை சாறு பிழிந்து இரவிலும், அதிகாலையிலும் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள், புழுக்கள் நீங்கும்.

மேலும் காய்ச்சல், நீர்க்கடுப்பு, செரிமானம் ஆவதில் பிரச்சனை போன்றவை இருந்தால் புதினா சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் இந்த பாதிப்புகள் நீங்கி விடும்.

3 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சிறிதளவு புதினாச்சாறு அளித்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்.  புதினாவை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு, வீக்கம், தீப்புண், சொறி, சிரங்கு நீங்கும்.

புதினாவில் இருந்து தயாரிக்கப்படும் ‘மென்தால்’ என்ற எண்ணெய் தலைவலிக்கு நல்லது. புதினாவில் இருந்து காதுவலி, வீக்கம், முட்டுவலி ஆகியவற்றுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.