Home இந்தியா திமுக,அதிமுக மீது மோடி கடும் தாக்கு! ஈழத் தமிழர், மீனவர்கள், பற்றி பேச்சு!

திமுக,அதிமுக மீது மோடி கடும் தாக்கு! ஈழத் தமிழர், மீனவர்கள், பற்றி பேச்சு!

588
0
SHARE
Ad

Narendra_Modiசென்னை, ஏப்ரல் 14 – தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதல் முறையாக திமுக, அதிமுகவை மிகக் கடுமையாக தாக்கிப் பேசினார்.

அத்துடன் தமிழக மீனவர் நலன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடு வாழ் தமிழர் பிரச்சனை பற்றியும் விரிவாக பேசினார் மோடி.

சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது, புத்தாண்டு காணும் தமிழக மக்களுக்கு கடவுள் வரங்களை அள்ளித்தர வேண்டும் என வேண்டுகிறேன்.

#TamilSchoolmychoice

தேர்தலுக்கு முன்பு இப்படி ஒரு ஆவேசம் இருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போதே தேர்தல் முடிவும் அறிவிக்கப்பட்டதும் இப்போதைய தேர்தலில் நடந்திருக்கும் விந்தை.

நிச்சயமாக மத்தியில் இருக்கும் அரசாங்கம் ஒழிய வேண்டும். புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பதில் அய்யமில்லை. தற்போதைய தேர்தல் நம்பிக்கைக்கான தேர்தல். தேர்தலில் மக்கள் எதிர்பார்ப்பது மாற்றத்தை மட்டுமல்ல.வரும் நூற்றாண்டில் பாரதம் எப்படி இருக்கப் போகிறது? என்பதற்கான தேர்தல் இது.

நமது கூட்டணி தமிழகத்தில் புதிய வருங்காலத்தை ஏற்படுத்தப் போகிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் நடுவே மக்கள் சிக்குண்டு தவிக்கின்றனர். உன்னை நானொழிப்பேன், நான் உன்னை ஒழிப்பேன் என சிந்திக்கிறார்களே தவிர, மக்கள் நலன் பற்றி சிந்திப்பதில் இரு கட்சிகளுக்கும் அக்கறை இல்லை.

தமிழகத்தில் 3-வது அணி ஆற்றல் மிக்கதாக உருவாகி இருக்கிறது திமுக- அதிமுகவை பாரதிய ஜனதா தலைமையிலான அணி நடுநடுங்க வைத்துவிட்டது. தமிழக மீனவர் நலன் இந்திய மீனவர்களின் நலனில் மத்திய அரசு அக்கறை கொள்ளவில்லை.

மீன்பிடித் தொழிலில் நவீன தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மீனவர்கள் வாழ்வில் நிச்சயம் நான் ஒளியேற்றுவேன். தமிழக மீனவர்களுக்கு நிச்சயம் நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம். மிரட்டும் சிறு நாடுகள் 125 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவை இப்போது இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகள் மிரட்டுகின்றன.

ஆனால் அண்டை நாடுகள் அலறக் கூடிய ஒரு மத்திய அரசு நிச்சயம் மத்தியில் அமையும். ஈழத் தமிழர்கள் உலகின் பல நாடுகளில் இந்திய வம்சாவளியினர் வாழ்கின்றனர். இலங்கை, மொரிஷீயஸ்,பிஜி தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வம்சாவளியினர் வாழ்கின்றனர்.

வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினருக்கு ஒரே தாய் பாரதம் மட்டும். வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினரின் பாஸ்போர்ட் வண்ணங்கள் மாறலாம்- ஆனால் அவர்களது ரத்தம் நமது ரத்தம்.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் துயரத்தை நிச்சயமாக புதிய அரசு துடைத்துவிடும். மலேசியா, இலங்கை, சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் உரிமை, நலனில் அக்கறை கொள்வோம் என நரேந்திர மோடி ஆவேசமாக பேசியுள்ளார்.