Home India Elections 2014 எதிர்கட்சிகள் சுயநலமாக செயல்படுகின்றன – சரத்குமார்!

எதிர்கட்சிகள் சுயநலமாக செயல்படுகின்றன – சரத்குமார்!

662
0
SHARE
Ad

Tamil-Daily-News-Paper_1959955693திருப்பூர், ஏப்ரல் 14 – திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், இலங்கைத் தமிழர் விவகாரம், அன்னிய முதலீடு ஆகியவற்றில் திமுக இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என விமர்சித்துள்ளார்.

திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், தமிழகத்தில் உள்ள திமுக, தேமுதிக ஆகியக் கட்சிகள் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது.

அதிமுக-வை தவிற வேறு எந்த கட்சியும் தமிழ் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும்,மின்வெட்டு பிரச்சனைக்கு தமிழக அரசு மீது குற்றம்சாட்டுவது இந்த இரு எதிர்கட்சிகளின் சுயநலம் என்றும் கூறினார் சரத்குமார்.

#TamilSchoolmychoice