Home வணிகம்/தொழில் நுட்பம் உலக அளவில் சிட்டி குழுமத்தில் 2% பணியாளர்கள் வேலை இழப்பு!

உலக அளவில் சிட்டி குழுமத்தில் 2% பணியாளர்கள் வேலை இழப்பு!

555
0
SHARE
Ad

citigroup_building_630நியூயார்க், ஏப்ரல் 15 – அமெரிக்காவின் மேன்ஹட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ‘சிட்டிகுழுமம்’ (CitiGroups), உலக அளவில் வங்கி மற்றும் பொருளாதார சேவைகளை செய்து வருகிறது.

இந்நிறுவனம் நடப்பு பொருளாதார நிலையைக் கருதி  பங்கு மற்றும் பத்திர வர்த்தகம் கையாளும் பிரிவுகளில் உள்ள 200 முதல் 300 பதவிகளை நிறுத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் உலக அளவில் சிட்டிகுழுமத்தில் 2% பணியாளர்கள் வேலை இழக்க உள்ளனர்.

இது குறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ரோமிரோ-அப்சிலாஸ் கூறுகையில், “தற்போதய நிதி நிலையை கருத்தில் கொண்டு எங்கள் குழுமத்தின் செலவீனங்களைக் குறைக்க முயன்று வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த 2008-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 323,000 ஆக இருந்த சிட்டிகுழுமத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை, நிதி நெருக்கடியின் காரணமாகப் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு வரை 251,000 பணியாளர்கள் என்ற அளவில் குறைந்துள்ளது.