இந்நிறுவனம் நடப்பு பொருளாதார நிலையைக் கருதி பங்கு மற்றும் பத்திர வர்த்தகம் கையாளும் பிரிவுகளில் உள்ள 200 முதல் 300 பதவிகளை நிறுத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் உலக அளவில் சிட்டிகுழுமத்தில் 2% பணியாளர்கள் வேலை இழக்க உள்ளனர்.
இது குறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ரோமிரோ-அப்சிலாஸ் கூறுகையில், “தற்போதய நிதி நிலையை கருத்தில் கொண்டு எங்கள் குழுமத்தின் செலவீனங்களைக் குறைக்க முயன்று வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
கடந்த 2008-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 323,000 ஆக இருந்த சிட்டிகுழுமத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை, நிதி நெருக்கடியின் காரணமாகப் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு வரை 251,000 பணியாளர்கள் என்ற அளவில் குறைந்துள்ளது.