இவர்கள் கடந்த சில நாட்களாகவே தங்களுக்கு வரவேண்டிய ‘சமூக காப்புறுதி’ (social insurance) பணத்திற்காக போராடி வருவதாக அமெரிக்காவில் இருந்து இயங்கிவரும் சீன தொழிலாளர் கண்காணிப்பு தெரிவிக்கின்றது. இவர்களில் பலரும் காவல்துறையால் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தைவான் நாட்டவரும் இணைந்து நடத்தும் இந்த நிறுவனம்அடுத்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் இந்தத் தொகையைக் கொடுத்து விடுவதாக அறிவித்துள்ளது. இருப்பினும் அவர்கள் அடுத்த வருடத்தின் மத்தியில் வெளியேறக்கூடும் என்ற அச்சம் தொழிலாளர்களிடத்தில் உள்ளது.
வெளியே இருந்து போராட முடியாத படி ஆயுதமேந்திய காவல்துறையினர் தொழிற்சாலைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய பெண் ஊழியர் ஒருவர், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிடாவிட்டால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என்று நிறுவனம் எச்சரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஊழியர்களிடத்தில் அதிகரித்துவரும் கோரிக்கைகளால், அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதையும், அதிகரித்து வரும் தொழிலாளர் பற்றாக்குறையையும் வெளிப்படுத்துகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.