Home India Elections 2014 மதசார்பற்ற அரசு அமைவதற்கான முயற்சியில் திமுக ஈடுபடும் – கருணாநிதி

மதசார்பற்ற அரசு அமைவதற்கான முயற்சியில் திமுக ஈடுபடும் – கருணாநிதி

466
0
SHARE
Ad

Karunanithiசென்னை,ஏப்ரல் 17 – தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தமிழகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு 36 தொகுதிகளில் தி.மு.க.வை ஆதரிப்பதாக அறிவித்து இருப்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.தஞ்சை பொதுக் கூட்டத்திலேயே நான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரை இரு கரம் கூப்பி வரவேற்பதாக அறிவித்திருக்கிறேன்.”

“மேலும் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 36 தொகுதிகளில் மட்டும் தி.மு.க. அணியினரை ஆதரிப்பதாக அறிவித்து இருக்கிறார்கள். அந்த 3 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியிலும் தி.மு.க. அணியினரை ஆதரித்து உதவிட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.”

#TamilSchoolmychoice

“தி.மு.க. ஏற்கனவே தெரிவித்திருப்பதை போல, மத்தியில் மதசார்பற்ற ஒரு அரசை அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடும் என்ற உறுதியையும் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.